மனைவி டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றேன்

மனைவி டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றேன்
விவாகரத்து வாங்கும் வரை சினிமாவில் நடிக்க மாட்டேன் என்னிடமிருந்து கெனிஷாவை பிரித்து விட்டனர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி நடிகர் ரவி மோகனும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் . இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் பிரபல பாடகியான கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் ஒரு திருமண விழாவில் பங்கேற்றது சர்ச்சையாக பேசப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விழாக்களில் அவர்கள் ஜோடியாக பங்கேற்றனர். இருவரும் ஒன்றாக வாழ்வது குறித்து ரவி மோகனின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் பாடகி கெனிஷா நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தான் சென்னையை விட்டு செல்வதாகவும் பதிவிட்டு இருந்தார். அவரது பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நடிகர் ரவி மோகன் இன்று கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
இத்தனை நாளும் நான் பேசாமல் இருந்தது என் முட்டாள்தனம். இனி விடமாட்டேன். என்னை சீண்டி பார்க்கிறார்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது. என் அலுவலகத்தில் தான் இருக்கிறேன். எத்தனை பேரை அனுப்பினாலும் நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். கராத்தே பாபுவாக மாறிவிட்டேன்.
விவாகரத்து வழக்கு முடியும் வரை நான் நடிக்கப் போவதில்லை. என்னால் நடிக்க முடியவில்லை. 23 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். 95 சதவீதம் வெற்றியை கொடுத்திருக்கிறேன். இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தப்பு. என் குடும்பத்தை சீண்டி பார்க்கிறார்கள். இனியும் சீண்டினால்
நான் சும்மா இருக்க மாட்டேன். என் குழந்தைகளை பார்க்க விடவில்லை. என் சின்னப் பையன் தினமும் என்னுடன் செஸ் விளை யாடி ஜெயிப்பான். அவர்களைப் பள்ளியில் போய் கூட நான் பார்க்கமுடியவில்லை. குண்டர்களை வைத்து தடுக்கிறார்கள். என் மகனும் நானும் சேர்ந்து டிக் டிக் டிக் படம் நடிக்கும் போது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்கள் என தெரிவித்திருந்தேன். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டுமென ரூ.50 லட்சம் பள்ளி கட்டணம் செலுத்தி நான் தான் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகளை பார்க்க முடியாத வருத்தத்தில் கையை அறுத்துக் கொண்டு
தற்கொலைக்கு முயன்றேன். கெனிஷாவை விரட்டி விட்டுவிட்டார்கள். கஷ்டப்படும்போது எல்லோரும் கூட இருக்கணும். அப்படி வந்தவர்தான் கெனிஷா. என்னை நம்பி வந்தவரை காலி பண்ணி அனுப்பி
விட்டார்கள்.23 வருடம் சினிமாவில் இருக்கிறேன். என் மீது எந்த கரும்புள்ளியும் கிடையாது. 45 வயதில் அழகைத் தேடி ஓடிவிட்டேன் என்று சொல்கிறார்கள். நான் அழகான நடிகைகளின் கூட தான் நடித்தேன். என் மீது சைபர் தாக்குதல் நடந்து வருகிறது. உயிரோடு நான் இருக்கக்கூடாது
என்று நினைக்கிறார்கள். கண்டிப்பாக நடக்கும் ஆனால் அவர்களை முடித்து விட்டு தான் என் உயிர் போகும். வீட்டை விட்டு எதுவும் இல்லாமல் வெளியே வந்து விட்டேன். நான் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். அவர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்களாவில் இருக்கிறார்கள். அவர்களை வெளியே போக சொல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும். நான் ஓட்டு வீட்டில் பிறந்தேன்.என் தந்தை முதலில் பியட் கார், அடுத்தது அம்பாசிடர்,அடுத்தது மாருதி கார் வைத்திருந்தார். நான் பி.எம்.டபிள்யூ. கார் வாங்க ஆசைப்பட்டு அவரிடம் கேட்டேன். திரீ சீரிஸ் கார் வாங்க போகிறேன் என்று சொன்னதும் 5 சீரிஸ் கார் வாங்கிக்கொள் என்று சொன்னார். அதன் விலையை அவரிடம் சொன்னதும் அதிர்ந்து
போய்விட்டார்.நான் ஒரு ஹீரோவுக்கு கூட போட்டியில்லை. எனக்கு நெகட்டிவிட்டி பிடிக்காது. மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கமாட்டேன் . சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், எந்த வேலை செய்து கொண்டும் பிழைத்து கொள்வேன். அநியாயம் எனக்கு பிளாக் மெயில் கல்யாணம் தான் நடை பெற்றது. கையை அறுத்து மிரட்டி தான் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குடும்ப தயாரிப்பு
நிறுவனத்தில் மட்டுமே திரைப்படங்களை நடிக்க சொன்னார்கள். என் வாழ்க்கை உள்ளிட்ட அனைத்தையும் கொடுத்து விட்டேன்.என் பெயரில் ஒரு வங்கி கணக்கு கூட கிடையாது. மிகவும் அதிகமான அநியாயம் எனக்கு நடந்துள்ளது. இவ்வாறு கூறிய ரவி மோகன் தொடர்ந்து பேச முடியாமல்
கண்ணீரைத் துடைத்தபடி கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லி விட்டு
சென்றார். பின்னர் அவர் மீண்டும் கண்ணீர்மல்க பேட்டி அளித்தார்.

என்னைப் பற்றி பேச இட்லி நடிகைக்கு தகுதி இல்லை
ரவிமோகன் கூறியதாவது:-
என்னைப் பற்றி பேச இட்லி நடிகைக்கு
தகுதி இல்லை. 3 பேரின் வாழ்க்கையை
அழிக்க முயன்ற இட்லி நடிகை என்னை பற்றி பேசுகிறார். என்னைப் பற்றி பேச உனக்கு ஏதாவது துப்பு இருக்கிறதா? வெட்கமாக இல்லை. என்னைப் பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை. இனி பேசினால் நான் சும்மா விட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments (0)
Add Comment