தலைவன் தலைவியை ரொம்பவே என்ஜாய் பன்ணி நடித்தேன்: நித்யா மேனன்

தலைவன் தலைவியை ரொம்பவே என்ஜாய் பன்ணி நடித்தேன்: நித்யா மேனன்
பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மோன் நடித்துள்ள படம் தலைவன் தலைவி. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்

.வரும் 25-ந் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் நித்யா மேனன் பேசியது,
பாண்டியராஜ் இயக்கத்தில் நடிப்பதை நான் ரொம்பவே என்ஜாய் பன்ணினேன். நானும் விஜய் சேதுபதியும் ஒரு மலையாள படத்தில் இணைந்து நடித்திருந்தோம். மூன்று நாட்கள் தான் அந்த படத்தில் பணியாற்றினோம்.

அப்போதே இன்னொரு படம் நாம் சேர்ந்து நடிப்போம் என்று பேசிக்கொண்டோம்.அது இப்போது நடந்து விட்டது, இந்த படத்தை விட எங்களுக்கு இன்னொரு நல்ல படம் அமைந்து விடாது என்றார்.

Comments (0)
Add Comment