பெத்தி பட வெளிநாட்டு உரிமையை பெற்ற ஹொம்பாலே பிலிம்ஸ்

பெத்தி பட வெளிநாட்டு உரிமையை பெற்ற ஹொம்பாலே பிலிம்ஸ்
கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ், தற்போது ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள பெத்தி படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இதில் ராம் சரண் மிகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க, ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ருதிஹாசன் நடனமாடி வுள்ளார். விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைள்ளார். பெத்தி படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment