குடும்பத்திற்கு அன்பை மட்டுமே கொடுங்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

குடும்பத்திற்கு அன்பை மட்டுமே கொடுங்கள்: ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. அவரது நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் சூர்யா தனது ரசிகர்களை சென்னையில் சந்தித்தார். ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியது, சமூக வலைதளங்களில் எவனோ ஒரு முட்டாள் பதிவிட்டால் அவர்களுடன் நாம் போய் சண்டை போடதேவையில்லை. நம்முடைய வேலையை பார்ப்போம். புரிந்து கொள்ளாதவர்களை நம்மால் மாற்ற முடியாது. உங்களுக்கு பிடித்த விஷயத்தை தினமும் செய்து கொண்டிருங்கள். இந்த
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஏ.ஐ. வருகிறது. உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்பை மட்டுமே கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Comments (0)
Add Comment