ஜிடிஎன் விமர்சனம்

ஜிடிஎன் விமர்சனம்
கோவையை சேர்ந்த தொழில் அதிபரும், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப் பாளர்களில் ஒருவருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘ஜி.டி.என்’ இன்று வெளியாகிறது. சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது தீராத ஆர்வம் கொண்ட ஜி.டி. நாயுடு (மாதவன்), வாங்கிய மோட்டார் சைக்கிளை பிரித்து ஆராய்கிறார்.அந்த ஆர்வமே அவரை புதிய கண்டுபிடிப்புகளின்
உலகிற்கு அழைத்துச் செல்கிறது. பின்னர் பஸ் போக்குவரத்து துறையில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, தொழில் அதிபராக உயர்கிறார். ஆனால் அவரது வளர்ச்சியை தடுக்க ஆங்கிலேய அரசின் வரித்துறைபல்வேறு சவால்களை ஏற்படுத்து கிறது. அந்த தடைகளை தாண்டி அவர் சாதித்தது எப்படி என்பதே மீதிக்கதை. தமிழகத்தின் அடையாளமாக திகழும் ஜிடி நாயுடுவின் பயோபிக் படத்தை அனைவரும் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம குமார். இருப்பினும் ஒரு சில இடங்களில் டாக்குமென்ட்ரி போன்ற ஃபீலை படம் தருகிறது.ஜி.டி. நாயுடுவாக நடித்திருக்கும் மாதவன், அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். இளைஞராக இருந்து வயதான தொழில் அதிபராக மாறும் அவரது உடல்மொழி, முகபாவனை சிறப்பு, முதல் மனைவியாக வரும் பிரியாமணி குறைந்த காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். இரண்டாவது மனைவியாக வரும் துஷாரா விஜயன் படம் முழுவதும் அவருடன் டிராவல் செய்கிறார் வரித்துறை அதிகாரியாக வரும் ஜெயராம் மற்றும் சத்யராஜ் நடிப்பு சிறப்பு. வில்லத்தனமான கதாபாத்திரத்தில் கருணாகரன் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மாதவனுக்கு அடுத்தபடியாக கருணாகரன் மனதில் பதிகிறார்.அரவிந்த் கமலநாதனின் ஒளிப்பதிவு மற்றும் கோவிந்த் வசந்தாவின் இசை
ரசிக்க வைக்கிறது.

Comments (0)
Add Comment