வரும் 30 முதல் ‘ஜாலி ஓ ஜிம்கானா’
சன் நெக்ஸ்ட் தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா- வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துகிறது. இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கை யான கேலி பேச்சுகளும் இடம் பெறுகின்றன.இதை பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். அவருடன் ஆபீஸ் கானா இசைக் குழு வும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு இசையை வழங்குகிறது. இதில் திரை நட்சத்திரங்கள், முன்னணி இசையமைப் பாளர் மற்றும் யூடியூப் பிரபலங்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.