கவர்ச்சிக்கு நோ: ரட்சிதா மகாலட்சுமி முடிவு
டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் நடித்த எக்ஸ்ட்ரீம் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருந்தார். முதல் படத்திலேயே காக்கி சட்டை மாட்டிய இவர் இரண்டாவதாக நடித்த
‘பயர்’ படத்தில் சட்டையை கழட்டி விட்டு படு கிளாமராக நடித்திருந்தார்.
இதனால் இவர் மீது கவர்ச்சி நடிகை என்ற பிம்பம் விழுந்தது. இதனைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகள் அனைத்தும் கிளாமர் கேரக்டராகவே வரத் தொடங்கியதால், இனி அதுபோன்ற ரோல்களில் நடிக்க கூடாது என முடிவு செய்தார் ராரட்சிதா. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘தள்ளி மனசு’ என்ற படத்தில் சிங்கிள் மதராக ஒரு அழுத்தமான ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.