நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் பர்ஸ்ட் லுக்

நடுக்கடலில் வெளியான ‘துரோகம் பழகு’ படத்தின் பர்ஸ்ட் லுக்
தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் மற்றும் போஸ்டர் வெளியீடுகள் தொடர்ந்து புதுமையான முறையில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ‘துரோகம் பழகு’ படக்குழுவினர் தங்களது படத்தின் போஸ்டரை புதுச்சேரி நடுக்கடலில் வெளியிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டு ள்ளனர்.படக்குழுவினரின் ஏற்பாட்டில் நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள், இப்படத்தின் போஸ்டரை தண்ணீருக்குள் வெளியிட்டனர். மகிழ் புரொடக்சன் சார்பில் சி. பியூலா மகிழ் தயாரித்துள்ள இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார். ராஜா மற்றும் பாலா இசையமைத்து ள்ளனர்.இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

Comments (0)
Add Comment