மீண்டும் போலீஸ் யூனிபார்மில் துரை சுதாகர்

மீண்டும் போலீஸ் யூனிபார்மில் துரை சுதாகர்
தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய துரை சுதாகர், இப்படத்திற்க்காக எக்ஸ் தள உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றார்.அதன் பிறகு களவாணி 2, டேனி, நந்தன் உள்ளிட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக உள்ளார்.தற்போது புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கியுள்ள ‘எக்ஸாம்’ வெப் தொடரில் போலீஸ் அதிகாரியாக மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இத்தொடர் வரும் 15 ம் தேதி அன்று அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment