ரஷ்யாவின் எகடெரின்பர்க் நகரில் ட்ரோன் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதம்!

ரஷ்யாவின் எகடெரின்பர்க் நகரில் ட்ரோன் தாக்குதல்; குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதம்!

ரஷ்யாவின் யூரல்ஸ் பகுதியில் உள்ள எகடெரின்பர்க் நகரின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 50 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டதாக ஆளுநர் டெனிஸ் பாஸ்லர் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் ஆறு பேர் மருத்துவ உதவியை நாடினர் என்றும், அவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்தப் பகுதி தற்போது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment