காதலர் தினத்தில் டிரீம் கேர்ள் ரிலீஸ்

காதலர் தினத்தில் டிரீம் கேர்ள் ரிலீஸ்
எம்.ஆர்.பாரதி இயக்கியி ருக்கும் படம் ‘டிரீம் கேர்ள்’. இதில் ஜீவா ஹீரோவாக நடிக்க, ஹரிஷ்மிதா ஹீரோயினாக நடித்திருக்கி றார்.மேலும் பிரபுசாஸ்தா, துருவன்,இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படம் பற்றி இயக்குநர் எம்.ஆர். பாரதி கூறியது,நான் இதற்கு முன்பு ‘அழியாத கோலங்கள் 2’ என்ற படத்தை இயக்கி இருந்தேன்.அதன் படப்பிடிப்பை 12 நாட்களில் முடித்திருந்தேன். டிரீம் கேர்ள் படம் முழுமையான காதல் கதை. இதில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது. காதலர் தினமான வரும் 14-ந் தேதியன்று இந்தப் படம் வெளியாகிறது என்றார்.

Comments (0)
Add Comment