வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள்: பிரியாமணி
நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ள ‘குட் வொய்ஃப்’ என்ற இணையத் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேற்று முதல் வெளியாகி உள்ளது.இதில் நடிகை பிரியாமணி, நடிகர் சம்பத் ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இதை ஒட்டி நடந்த விழாவில் நடிகை பிரியாமணி பேசியது, திரைப்படமோ அல்லது வெப்சீரிஸோ உங்களுக்கு வரும் வாய்ப்புகளை விட்டுக் கொடுக்காதீர்கள். தன் வாழ்க்கையில் வரும் சவால்களை எப்படி என் கதாபாத்திரம் தர்மிகா எப்படி எதிர்கொள்கிறாள் என்பதையும் இதில் பேசியிருக்கிறார்கள். 4வது முறையாக நான் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக் கிறேன். ரேவதி மேம் இயக்கப் போகிறார் என்றதும் உடனே சம்மதித்து விட்டேன். நிச்சயம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றார்.