சிக்மா நாயகியின் இயக்குனர் கனவு (அ) இயக்குனர் கனவில் பரியா அப்துல்லா

சிக்மா நாயகியின் இயக்குனர் கனவு (அ) இயக்குனர் கனவில் பரியா அப்துல்லா
தெலுங்கில் ஜதி ரத்னலு படம் மூலம் பிரபலமான பரியா அப்துல்லா, தற்போது தமிழில் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் அக்டோபர் 2ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இந்நிலையில் பரியா அப்துல்லா அளித்த ஒரு பேட்டியில், தெலுங்கு சினிமாவே தனது வீடு என்றும், தெலுங்குத் திரையுலகில் தொடர்ந்து பணியாற்றி வந்த நான், இப்போது சிக்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறேன். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகிற்கு இடையேயான பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.இரண்டு திரையுலகமும் ஏறக்குறைய ஒன்றுதான். ஒரே ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசம் உணவுப் பழக்க வழக்கங்களில் மட்டுமே உள்ளது. எனக்கு படம் இயக்குவதில் அதிகப்படியான ஆர்வம் இருக்கிறது. ஏற்கனவே சில கதைகளை எழுதத் தொடங்கி உள்ளேன். நான் இயக்குநராக அறிமுகமாக இன்னும் சிறிது காலம் ஆகும். அப்படி நான் ஒரு படத்தை இயக்கினால், அதில் நானே நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment