முதல்வர் விஜய்க்கு காமராஜ் பட இயக்குனர் வேண்டுகோள்
காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் ‘பொற்கால ஆட்சியின் சாதனைகள்’ ‘காமராஜருடன் கால் நூற்றாண்டு’ புத்தக வெளியீட்டு விழா நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் நடந்தது. காமராஜ்’ திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், இயக்குனர் ஏஜே பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய இயக்குனர் பாலகிருஷ்ணன்,காமராஜரின் வீடு மீண்டும் பழைமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்தார்.