நடிகர் ‘பிளாக் பாண்டி’ இசையமைத்த ஆல்பம் பாடலை வெளியிட்ட தேவா
காமெடி நடிகரான ப்ளாக் பாண்டி ஆல்பம் பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார். சுய உணர்தல் மற்றும் மேம்பாட்டிற்கான மையமான ஞான சஞ்சீவனம் குருகுல நிறுவனரும், வாழ்க்கை முறை வழிகாட்டியும் ஊக்கமூட்டும் பேச்சாளருமான சசி குமார், அடுத்த மாதம் கோயம்புத்தூரில் ‘பெரிதினும் பெரிது கேள் 2026’ என்ற வணிக மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வை முன்னிட்டு, இதற்கெனவே பிரத்யேகமாக நடிகர் ‘பிளாக் பாண்டி’ இசையமைத்த ஆல்பம் ஒன்றை, மூத்த இசையமைப்பாளர் தேவா வெளியிட்டார். இது பற்றி பிளாக் பாண்டி கூறியது, வேலைக்காக அடுத்தவர்களிடம் போய் நிற்காமல் நாமே சொந்தமாக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான தீம் ஆல்பத்தை உருவாக்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு குருஜி மற்றும் ஆல்பத்தை வெளியிட்ட தேவாவுக்கு நன்றி சொல்கிறேன் என்றார்.