மோகன் லாலுக்கு ஜோடியான பாக்கியஸ்ரீ போர்ஸ்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “காந்தா” படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகமானவர் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ். தெலுங்கில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான “லெனின்” படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முறையாக “ஆபரேஷன் கங்கா” என்கிற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத் திரை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். விஷ்ணு மோகன் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க, பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீப நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவை பாக்யஸ்ரீ போர்ஸ் வெளியிட்டுள்ளார்.