அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட ரிலீஸ் அப்டேட்
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ரெட்ட தல”. பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர்,ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, படத்தில் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ஆக்ஷன்,ரொமான்ஸ் கலந்த எண்டர்டெயினராக உருவாகியுள்ள இதில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் மிரட்டியுள்ளார். அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு டிஜோ டாமி ஒளிப்பதிவு செய் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.