ஆரோமலே- விமர்சனம்
பள்ளி மற்றும் கல்லூரியில் காதல் தோல்விகளை சந்தித்த கிஷன் தாஸ், மேட்ரிமோனியல் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு மேனேஜராக இருக்கும் ஷிவாத்மிகாவுடன் அடிக்கடி சண்டை போடும் அவர், ஒரு கட்டத்தில் அவரையும் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஷிவாத்மிகா காதலுக்கு ஓகே சொல்லும் நேரத்தில் சில காரணங்களால் அவர்கள் பிரிகிறன்றனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன? முடிவில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சாரங் தியாகு. சிலம்பரசனின் பின்னணி குரல் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இருப்பினும் காதல் காட்சிகள் அழுத்தம் இல்லாதது வருத்தம்.பள்ளி, கல்லுாரி மாணவன் இளைஞன் என மூன்று கேரக்டரில் நடித்து கிஷன் தாஸ் அசத்தியுள்ளார். துணிச்சலான பெண்ணாக ஷிவாத்மிகா ஸ்கோர் செய்துள்ளார். ஹர்சத் கான்,விடிவி கணேஷ் இருவரும் சிரிக்க வைக்கின்றனர்.
கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு, சித்து குமாரின் இசை படத்திற்கு பிளஸ்.