மீண்டும் யுவன் இசையில் ஆண்ட்ரியா!
ராம் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி மற்றும் அஞ்சலி இணைந்து நடிக்கும் இப்படத்தில், சூரி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் என சமீபத்தில் அப்டேட் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திலிருந்து ‘நமக்காய் ஒரு வானம்’ எனும் பாடல் நேற்று வெளியானது. இந்த பாடலை யுவன், ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.இதுவரை யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஆண்ட்ரியா பாடிய எல்லா பாடல்களும் ஹிட்டானதால் இந்த பாடலும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது