குரோர்பதி ஷூட்டிங்கில் அமிதாப்பச்சன் காயம்
பாலிவுட் நடிகரான அமிதாப்பச்சன் தனது 83 வயதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி குரோர்பதி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் குரோர்பதி நிகழ்ச்சி படப்பிடிப்பின் போது அமிதாப்பச்சன் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் குறித்து அவர் கூறுகையில், “பெரிய காயம் இல்லை. ஆனால் நிற்பதில் சற்று சிரமம் இருக்கிறது. இதுகுறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். காயம் காரணமாக அமர்ந்தபடி தொகுத்து வழங்குகிறேன்” என்றார்.