அடுத்த ரவுண்டுக்கு தயாரான அமலாபால்
மைனா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அமலா பால், தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2023-ல் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவர்களுக்கு 2024ம் ஆண்டு ‘இலாய்’ என்ற ஆண் குழந்தை பிறந்தது. குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை பராமரிப்பு என பிசியான அமலா பால், ஒரு சிறிய இடை வேளைக்கு பிறகு ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘கைதி’ இந்தி ரீமேக் மற்றும் சில மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.