ஹாட்ரிக் அடித்த அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஜோடி
நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் ஏற்கனவே புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டமான படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இதில் ஏற்கனவே தீபிகா படுகோன். ஜான்வி கபூர், மிருனாள் தாக்கூர் என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராஷ்மிகாவும் படத்தில் நடிக்க உள்ளார்.
இதன் மூலம் 3வது முறையாக அல்லுவுடன் ஜோடி சேர்கிறார் ராஷ்மிகா. ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு மூன்று ஹீரோயின்களா என பேசப்பட்ட நிலையில், தற்போது 4 வதாக ராஷ்மிகா இணைவதால் கிசுகிசு இன்னும் அதிகமாகி உள்ளது.