பிஸியான அம்மாவாக மாறிய அபிராமி

பிஸியான அம்மாவாக மாறிய அபிராமி
நடிகை அபிராமி, ஒரு சிறிய கேப்புக்கு பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சமீபத்தில் அர்ஜுனுடன் அவர் சேர்ந்து நடித்த “பிளாஸ்ட்” படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இதனால் அபிராமிக்கு தற்போது அதிக அளவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் மாறி மாறி நடித்து வருகிறார். தெலுங்கில் “காமாக்யா” என்கிற படத்தில் ஏற்கனவே நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது “சுதிர் ஜோக்கர்” என்ற படத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவாகப் பவர்புல் வேடத்தில் நடித்துள்ளார் அபிராமி. பி.எஸ். சுனில் முப்பலா இயக்கும் இந்த படத்தில் சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிக்பாஸ் புகழ் ஆயிஷா அறிமுகமாகிறார். தற்போது இந்த படத்தில் அபிராமி நடித்துள்ள “காயத்ரி தேவி” என்கிற கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Comments (0)
Add Comment