தமிழ் சினிமாவுக்கு விரைவில் புதிய ஓடிடி தளம்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது.இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு பேசியது,
தமிழ் சினிமாவுக்கான ஓ.டி.டி. தளம் அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது குறித்து நாம் அனைவரும் ஒன்றாக பேசி முடிவு செய்வோம். நானும் இந்த சினிமா குடும்பத்தில் ஒருத்தன்.இந்த துறையில் இருந்து தான் முதல்வர் விஜய் வந்து உள்ளார். இனி ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பாக விருதுகள் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படாமல் உள்ள அனைத்து விருதுகளும் வழங்கப்படும். சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.