96 பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில்
“96, மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பகத் பாசில், தற்போது உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள இயக்குனர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.