12 ஆண்டுக்குப் பிறகு நடிக்க வந்த ரோஜா

12 ஆண்டுக்குப் பிறகு நடிக்க வந்த ரோஜா
90களில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, இயக்குனர் ஆர்கே செல்வமணி திருமணம் செய்து கொண்ட பிறகு அரசியலில் ஈடுபட்டு, எம்எல்ஏவானார்.
இந்த நிலையில்12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். அறிமுக இயக்குனர் டி.டி.பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லெனின் பாண்டியன் என்ற படத்தில் ரோஜா நடித்துள்ளார். இதில் சந்தானம் என்ற கேரக்டரில் அவர் நடித்துள் ளார். மேலும் கங்கை அமரன், சிவாஜி பேரன் தர்ஷன் கணேஷ் உள்பட பலர் நடிக்கின்ற னர்.படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் ரோஜாவை அடிக்கடி பார்க்கலாம்.

Comments (0)
Add Comment